எங்கள் பிதாவாம் கர்த்தாவே
engal pidhaavaam karthaavae
எங்கள் பிதாவாம் கர்த்தாவே எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரம் எல்லோருக்கும் நீரே தலைவராக என்றென்றும் மேலாய் இருக்கிறீர் எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரம்
1.எல்லாவற்றையும் ஆள்பவரே கர்த்தாவே இராஜ்யமும் உம் சொந்தமே அதிகாரமானலும் ஆளுகையானாலும் சர்வமும் உமக்கே உம்முடையதே எங்கள்பிதாவாம்
2.வானிலும் பூவிலும் உள்ளவைகள் கர்த்தாவே உமக்கே உம் சொந்தமே எவரையும் உயர்த்தவும் மேன்மை படுத்தவும் உமது கரத்தால் ஆகும் என்பேன்
3. வல்லமை மகிமை மாட்சிமை கர்த்தாவே என்றென்றும். உம்முடையதே வல்லமை சத்துவம் உம்கரத்திலே உண்டு ஐஸ்வர்யம் கனமும் உம்முடையதே