எங்கள் நலன்களின் அற்றே
engal nalangalin atre
எங்கள் நலன்களின் அற்றே இயேசுவே நீர்தானே - எங்கள் அனைவரின் உறைவிடமே இயேசுவே நீர்தானே
ஜீவ ஊற்று நீர்தானே - என் உறைவிடமும் நீர்தானே
அருகில் இருப்போர்க்கும் தொலைவில் உள்ளோர்க்கும் சமாதானம் நீர்தானே அழுவோரின் உதட்டில் நன்றி பலியும் பாடலும் மகிழ்ச்சியும் நீர்தானே
உடைந்த உள்ளத்தில் நலிந்த நெஞ்சத்தில் வாழ்பவர் நீர்தானே சேர்ந்திடும் வேளையில் கலங்கிடும் நேரத்தில் ஊக்கமும் திடமும் நீர்தானே