எங்கள் தேவனே யேகோவா ராஜனே
engal devanae yegovaa raajanae
எங்கள் தேவனே யேகோவா ராஜனே நாங்கள் ஒன்றாய் கூடி நன்றிகள் பாடி உம்மை உயர்த்துவோம்
கருவில் உருவம் தோன்றுமுன்னே என்னை கண்டவரே தாயின் வயிற்றில் உமக்காய் பிரித்து உரிமை கொண்டவரே
தீங்கு நாளில் கூடார மறைவில் ஒளித்து வைத்தவரே கன்மலை மேல் ஏற்றி - என் தலை உயர்த்தி மகிமைப்படுத்தினீரே
கொந்தளிக்கும் பாவச்சேற்றில் விழுந்து நான் கிடந்தேன் குனிந்து தூக்கி இரத்தம் ஊற்றி என்னை மீட்டவரே
செய்வதெல்லாம் வாய்க்கச் செய்தீர் சொன்னது ஆகச்செய்தீர் தொட்டதெல்லாம் துலங்கச் செய்தீர் எல்லாம் உம் கிருபை