எங்கள் அழகான செல்லப் பாலரே
engal azhagaana sellap paalarae
1. எங்கள் அழகான செல்லப் பாலரே யேசு வார்த்தைக் கேளும் இந்தக் காலமே "பாலரே! என்னண்டை வந்து சேருமே! பாலர் அனைவரும் வந்து சேருமே".
பல்லவி
வந்து சேருமே! வந்து சேருமே! பாலர் அனைவரும் வந்து சேருமே!
2. விண்ணின் ராஜனான யேசுவண்டடைக்கே பால்ய சேனையாரைச் சேர்ப்போம் உடனே "வாரும் யேசுவண்டை என்று அழைப்போம் அவர் திவ்ய அன்பை எங்கும் கூறுவோம்.
பல்லவி
வந்து சேருமே! வந்து சேருமே! பாலர் அனைவரும் வந்து சேருமே!
3. வந்தால் எந்தன் மார்பில் சேர்த்து அணைப்பேன் சிலுவையில் தொங்கி ஜீவன் விடுத்தேன் பாவ மன்னிப்பீவேன் சிறை நீங்கிடும் உயிரோடெழுந்தேன் என் அண்டை வரட்டும்.
பல்லவி
வந்து சேருமே! வந்து சேருமே! பாலர் அனைவரும் வந்து சேருமே!
4. அன்பின் கரத்தண்டை வந்தோம் யேசுவே! அங்கு தங்குவோரைப் பாவம் சேராதே. அவமாகும் சாத்தான் தந்திரங்களும் சேர்வோம் உமதண்டை பாலராயினும்.
பல்லவி
வந்து சேருமே! வந்து சேருமே! பாலர் அனைவரும் வந்து சேருமே!