எங்கள் ஆராதனைக்குரியவரே எங்கள் ஆராதனை
engal aaraadhanaikkuriyavarae engal aaraadhanai
எங்கள் ஆராதனைக்குரியவரே எங்கள் ஆராதனை நாயகரே - 2 துதி கன மகிமைக்கு பாத்திரரே புகழும் ஸ்தோத்திரம் உமக்குத்தானே - 2
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை முழு உள்ளத்தோடு உமக்கு ஆராதனை முழு பெலத்தோடு உமக்கு ஆராதனை - 2
1.தூரம் சென்ற பாவி என்னை தேடி வந்தீரே மார்போடு சேர்த்தணைத்து உம் பிள்ளையாக்கினீர் - 2 - ஆராதனை
2.சோர்ந்து போன நேரங்களெல்லாம் பெலன் தந்தீரே சத்துவத்தை அளித்து என்னை பெருகப்பண்ணினீர் - 2 - ஆராதனை
3.ஊழியத்தின் பாதையிலே எத்தனை சோதனை (நிந்தனை) வந்த போதும் கைவிடாமல் தாங்கி நடத்தினீர் - 2 - ஆராதனை