எங்கே சென்றாலும்
engae sendraalum
எங்கே சென்றாலும் என்ன செய்தாலும் என்னை பின்தொடரும் நண்பன் நீரே (2) பள்ளத்தாக்கில் நான் நடக்கையிலே நீர் என்னுடனே நடந்தீரே நடக்க முடியாமல் நெருக்கையிலே நீர் என்னை சுமந்தீரே
என்னை தாங்கிடும் தாங்கிடும் தாங்கிடும் என்னை தாங்கிடும் தகப்பன் நீரே என்னை தேற்றிடும் தேற்றிடும் தேற்றிடும் என்னை தேற்றிடும் தாயும் நீரே (2)
1. உலகம் மறந்ததே, வாழ்க்கை கசந்ததே போதும் இந்த வாழ்க்கை, என்றேனே (2) ஆனால் நீர் என்னை விடவில்லை எந்தன் நிழல் போல தொடர்ந்தீரே ஆனால் நீர் என்னை விடவில்லை என்னை தொடர்ந்து வந்தீரே
2. பெலனும் குறைந்ததே, நம்பிக்கை பிறந்ததே எல்லாம் முடிந்தது என்றனரே பெலனும் குறைந்ததே, நம்பிக்கை தகர்ந்ததே எல்லாம் முடிந்தது என்றனரே நீர் என் பட்சத்தில் இருக்கும்போது, எதுவும் என்னை அசைக்க முடியாதே நீர் என் பட்சத்தில் இருக்கும்போது, என்னை அசைக்க முடியாதே