எங்கே போவேன் நான்
engae poven naan
எங்கே போவேன் நான் எந்தன் இயேசுவே ! யாரிடம் சொல்வேன் நான் எந்தன் பாரத்தை
ஆற்றவும் தேற்றவும் உம்மைப் போல யாருண்டு அன்பு காட்டவும் அரவணைக்கவும் உம்மைத் தவிர எவருண்டு நீரே எந்தன் தஞ்சம் தயவு காட்டுமே ! கிருபை தாருமே !
உந்தன் அன்பை உணராமல் நாங்கள் செய்த தவறுகள் எண்ணிலடங்காதே ! அதை எழுத முடியாதே ! - 2 ஆனாலும் மன்னித்தீர் ! மன்னித்தீர் ! தயவாய் என்னை மன்னித்தீர் !
எம் கண்கள் உம்மைத் தேடுதே ! கரங்கள் கூப்பி அழைக்குதே ! அன்பு தேவனே ! என் அருகில் வாருமே ! - 2 என்னையும் தேற்றுவீர் ! தேற்றுவீர் ! அன்பாய் என்னைத் தேற்றுவீர் !
உந்தன் வார்த்தை இன்று தாருமே ! என் வழியை நீர் காட்டுமே ! எந்தன் இயேசுவே ! என் அன்பு நண்பனே ! - 2 நித்தமும் நடத்துவீர் ! நடத்துவீர் ! கனிவாய் என்னை நடத்துவீர் !