எங்கே போவேன் ஏசுவே
engae poven esuvae
எங்கே போவேன், ஏசுவே! நான் எங்கே போவேனோ?
உம்மைப் போல தாங்கும் தோள்கள் எங்கும் இல்லையே... இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஒளியை தேடுகிறேன். ஒளியான இறைவா! என்னோடு பேசுமே.
மறைவாக நாள்தோறும் கண்ணீர் சிந்துகிறேன். காண்கின்ற இறைவா! என்னை பாருமே. எங்கே போவேனோ நான்? எங்கே போவேனோ? உயிர் தந்த உம்மை விட்டு எங்கே போவேனோ...?
அடுங்காட்டில் சிக்கிக் கொண்டு வழியை தேடுகிறேன். வழிகாட்டும் இறைவா! மீட்க வாருமே. வியலுற்ற பாதம் கொண்டு நடையை போடுகிறேன். எனைக் காக்கும் இறைவா! வலியை போக்குமே.
அடைகளவும் காக்கை சுற்ற, கலங்கி தவிக்கின்றேன். இறகுஅடை தழீஇ காக்க வாருமே! இடர் மிகுந்த நெஞ்சம் கொண்டு, வருந்தி தவிக்கிறேன். அவல் நீக்கும் தலைவா! அணைத்து கொள்ளுமே.