எங்கே ஒடுவாய் நீ எங்கே
engae oduvaay nee engae
எங்கே ஒடுவாய் நீ எங்கே ஓடுவாய் சிங்கம்போல் விரைந்து மரண தூதன் வருகிறான்
கண்மணிபோல் பேணி வளர்க்கும் செல்வக் குழந்தைகள் கண்ணை மூடும் காட்சி காணும் தீய பாவியே
துள்ளித் துள்ளி ஓடி விளையாடும் பிள்ளைகள் கொள்ளை நோயால் சாகும் காட்சி காணும் பாவியே
யுத்த வீரர் போல் திடனாய் நிற்கும் வாலிபர் நித்திரைபோல் சாகும் காட்சி காணும் பாவியே
ஆஸ்தி செல்வம் மேன்மை தனை நம்பி வாழ்வோரும் - அழிந்து மண்ணாய் மடியும் காட்சி காணும் பாவியே
இன்று நீ மரித்தால் எங்கே போவாய் என்பதை இப்பொழுதே சிந்தை செய் கல்லான பாவியே
இயேசு உன்னை அழைக்கிறார் திரும்பி வாராயோ இல்லையேல் இரண்டாம் மரணம் உண்டு நிச்சயம்
நானே பாதை ஜீவன் சத்தியம் என்ற இயேசுவை உன் ஜீவனாக ஏற்றுக்கொள் அப்போது பிழைப்பாய்