எங்கே எங்கே யான்
engae engae yaan
எங்கே, எங்கே யான் தேடுவேனோ! என் ஆத்தும நேசரை நான் - ஆ எங்கே தேடுவேனோ!
1. பூரண சொரூபனாம் புவியிலுதித்தவர் துஷ்டராலே விதைக்கப்பட்டார் உருவம் வாடி உடல் மாறியதால் முகத்தை மறைத்தேன் துரோகியே நான் எங்கே தேடுவேனோ! - எங்கே
2. அன்றோர் நாளிலே பாவப் பிணியினால் அன்பாமவரை மறந்திருந்தேன் அன்னை போலக் கண்டு எடுத்தார் என்ன இன்ப நேசரவர் எங்கே தேடுவேனோ! - எங்கே
3. அழகிற் சிறந்தவர், அன்புக்கேற்றவர் ஆத்துமாவுக் கினியவராம் அருகிலிருந்து ஆற்றும் துணைவர் அருமை இரட்சகர் இயேசுவல்லோ எங்கே தேடுவேனோ! - எங்கே
4. வாயின் வாசனை கமழும் இன்பமாய் வாக்கில் கபடோ காணாதோராம் வலிமை வாய்ந்த வல்ல சாதனம் வருவேன்னி யென்றுரைத்தவராம் எங்கே தேடுவேன்!" - எங்கே
5. கேளு, கேளு என் அரிய நண்பரே தேனினும் நேசரவர் தேசமெங்கும் கேட்டுமறியா தெய்வ சுதனாம், என் பிரியன் எங்கே தேடுவேனோ - எங்கே