என்றும் மாறா என் தேவன்
endrum maaraa en devan
என்றும் மாறா என் தேவன் இன்றுன்னை அழைக்கிறாரே ஏற்றுக் கொள்வாய் என் நேசரை தாமதம் செய்யாமலே
உன் கவலை உன் கண்ணீரை அவரிடம் ஊற்றி விடு உன் துன்பத்தை உன் துக்கத்தை அவரிடம் செலுத்தி விடு
உன் பெற்றோரும் உன் உற்றாரும் கைவிடினும் அவரே உன்னை நேசித்தே அரவணைப்பார் ஏற்றுக்கொள்வாய் இன்றே
உன் பாவங்கள் சிவப்பாயினும் அழித்திடுவார் இன்றே உண்மையாக இயேசுவையே ஏற்றுக் கொள்வாய் இன்றே