என்று வருவேன்
endru varuven
1. என்று வருவேன் சீயோன் புரம் அன்று பெறவே எந்தன் மகிமை வென்றோருடனே நின்று ஆளுவேன் என்றென்றும் இயேசுவுடன் நின்று இணைந்தே
தேவ மகிமை இலங்கும் நேய பிதாவின் சமூகம் நித்தியம் அகிலவும் வீசும் - ஆ ஆ ஆ சத்திய பரனின் சுபாவம்
2. அன்பின் நிறைவே தேவசாயல் இன்பம் கமழும் சீயோன் மலை பண்பாளர் உயரும் இராஜன் நகரம் விண்ணவர் தாபரமாய் என்றும் விளங்கும் - தேவ
3. ஜாதிகளை ஆட்சி செய்யவே ஜீவியத்தில் செங்கோல் உடையார் நீதி ஒளிரும் சீயோனதுபோல் ஜோதி பிதாவின் திரு சிந்தை கொண்டவர் - தேவ
4. ஆணையதினால் ஆன சேவை ஆலயத்தில் ஆற்றும் உரிமை ஆசாரியராக அடைந்தோர் இவரே ஆட்டுக்குட்டியானவர் பாதந்தொடர்ந்தோர் - தேவ
5. சீயோன் அருளும் நல்ல வசனத்தால் மீட்படைந்த ோர் நற்பலன்கள் தேவ மகிமை சற்குணநாதன் தரித்து பூரணராய் எங்கும் ஜொலிப்பார் - தேவ