என்று காண்பேனோ
endru kaanbeno
என்று காண்பேனோ என் நேச இயேசு ராஜனை! - நான்
1. மேகமீதில் இன்ப ராஜன் இயேசுவும் காகளத் தொனியுடனே தோன்றும் வேளையில் போரில் ஜெயங்கொண்டோர் யாரும் கூடுவாரங்கே - என்று
2. தூயர் தாசர் ஆர்ப்பரித்து மே ஆவி ஆத்துமா சரீரம் மீட்பின் நாளிலே மன்னனின் மா மகிமை வண்ணம் மாறுவார் - என்று
3. ஆவல் விழித்து ஆசையாக ஆவியில் போராடி ஜெபித்து ஜெபவீரன் அண்ணல் இயேசு ஆதரவாய் அணைத்துக்கொள்வாரே - என்று
4. வீரமாய் எதிர்த்துச் சோபித்தேகினோர் சொல்லொண்ணாத பாடுகளை மண்ணில் சகித்தோர் கண்ணிமைப் பொழுதிலவர் விண்ணிலேகுவார் - என்று
5. நேசத்தினால் என் இதயம் பொங்கி பாயுதே நேசரே! நீர் வருமென்ற ஓசை கேட்குதே பாசத்தால் நான் சோகமடைந்தேன் - ஆ! மணாளனே! - என்று
6. எல்லையில்லா மகிமை வீசும் தேசமே செல்லவே நீ ஆயத்தமா? ஓ! மணாளியே! வல்லமையாய் இயேசுவோடு சேர்ந்து ஆளவே - என்று