எந்தனுக்காகவே சிலுவை
endhanukkaagavae siluvai
எந்தனுக்காகவே சிலுவை மீதினில் இத்தனை பாடுபட்டீர் - ஏசையா
அனுபல்லவி
அனுபல்லவி தூயதிருக்கரங்களிலும் திருவடிகளிலும் ஆணிகடாவிய வேதனை சகித்தீரோ
சரணம்
சரணம் கண்மலர் அயர்ந்ததோ மெய்யெல்லாம் சோர்ந்ததோ தாங்கொணா தாகத்தால் நாவெல்லாம் உலர்ந்ததோ எந்தன் மீது நீர் கொண்ட பேரன்பால் ஆ எந்தன் மீது நீர் கொண்ட பேரன்பால் இத்தனை துன்பமெல்லாம் சகித்தீரோ ஸ்வாமி
திருமேனியெல்லாம் ரத்தவெள்ளம் ஓட பாதகர் படுத்திய பாடுகளைப் பொறுத்தீர் எங்குமே கண்டதில்லை இத்தனை பேரன்பை ஆ எங்குமே கண்டதில்லை இத்தனை பேரன்பை என்னையே படைத்தேன் நின்னடி பணிந்தேனே