எந்தனை மீட்க இயேசுவே
endhanai meetka yesuvae
எந்தனை மீட்க இயேசுவே ஈந்தீர் உந்தனின் சொந்த ஜீவனையே
சிந்தனை செய்வேன் சிலுவையால் வந்த வந்த மேன்மை எந்தன் பாக்கியமே - 2
காவினில் வேர்வை இரத்தமாய் ஓட கஸ்தியடைந்திடக் காரணமேன்? - 2 பாவியாம் எந்தன் பாவத்தின் கோர காட்சி கண்ட கலக்கமோ தான் - 2
கையைக் கட்டி கள்ளனைப் போலவே பிலாத்து முன் நின்று காரணம்? - 2 வையகந்தனில் நான் இரும்பினால் செய்த வலிய கொடுமை போக்கிடவோ - 2
முள்முடி சூட்டி மூர்க்கரடித்து முகத்தினில் உமிழ்ந்திடக் காரணமேன் ? - 2 கள்ளனாம் எனையே கர்த்தரில் இணைக்கும் - 2 கருணை தேவனின் அன்புதானோ - 2
பாதகர் பலபல பரிகாசம் சொல்ல - 2 பதில் உரையாத காரணமேன் - 2 பாதகன் எந்தன் நாவினால் மொழிந்த தீய மொழிகளின் தீவினையோ - 2
ஈட்டியால் குத்தி இரத்தமும் பாய்ந்திட ராஜாதி ராஜனே காரணமேன்? - 2 மீட்டிடக் கொடுத்தேன் இரத்தமே யென்று காட்டியே கல்நெஞ்சம் உடைத்திடவோ
வாதைகள் மிஞ்சி தாகமுமாகி வாடி வதங்கிடக் காரணமேன்? - 2 பேதையாம் என்னுள்ளம் பிசாசினா லடைந்த பெரிய காயத்தின் வேதனையோ - 2
கோரமாய் இயேசுவே கொல்கொதா மலையில் குருசினில் தொங்கிடக் காரணமேன் ? - 2 பாரமாம் எந்தன் பாவம் சுமக்க பரமன் விதித்த பலி நீரோ - 2
இத்தனை பாடும் ஈனர்கள் கேடும் இயேசுவே சகித்துக் காரணமேன் - 2 நித்திய மகிமைக்காய் நியமிக்க என்னை அத்தனே அளித்தீர் ஆருயிரை - 2