எந்தன் இயேசுவே நீரே
endhan yesuvae neerae
1. எந்தன் இயேசுவே நீரே எனக்காறுதல் உந்தன் பாதம் காத்திருப்பேன் கானகமாம் பாதையிதில் கலங்கிடாது நிதம் முன்னேறுவேன்
இம்மட்டும் யான் ஜீவிப்பது உம் தயவு அல்லவோ இயேசு நாயகா! உம் சிறகதின் கீழில் மறைவேனே தீங்கென்னை அணுகாது காத்திடுவீரே
2. கைவிடேன் நான் உன்னை என வாக்குரைத்தவர்! மெய்யாக உம்மைப் பின்பற்றுவேன் துன்பம் துயர் சூழ்ந்திடினும் இன்பமுகம் காட்டி தேற்றிடுவீரே!
3. உம்மால் ஒரு சேனையில் பாய்ந்து செல்வேன் தேவனாலே மதிலும் தாண்டுவேன் சத்துருவின் சதிகளை சத்தியர் உம் பெலனால் ஜெயித்திடுவேன்
4. களிமண் போல் உம் கரத்தில் தத்தம் செய்கிறேன் களிம்பு நீங்க சுத்தம் செய்வீர் விண் சாயலை என்னில் ஈந்து மண் சாலை முற்றும் மாற்றிடுவீரே!
5. ஏதுமில்லா ஏழையை நீர் கண்டெடுத்தீரே என்ன செய்வேன் உம் அன்பு கீடாய் நித்தம் திருமுகம் கண்டு நீடுழியாய் உம்மைச் சேவித்திடுவேன்