எந்தன் இயேசு உன்னதத்தில்
endhan yesu unnadhathil
1. எந்தன் இயேசு உன்னதத்தில் அன்புள்ளவன் வாழும் போது ஏழையேன் கலங்கிறேன் இப்பூமியில் - அதால் என்றும் அவர் கிருபை மட்டும் போதும்
2. இன்னல்களாம் குன்றுதனிற் பின்னிடாமல் ஏறுதற்கு இயேசு என் கால் தன்னை மான்கால் போலாக்கி - என்னை இன்பமாய் என் பாதையோடச் செய்குவார்
3. யாரும் துணையில்ல என்றோ ஏகனாய் நான் ஆனேன் என்றோ என் மனதில் எண்ணிடேன் ஓர் நாளும் - இயேசு என்னுடன் இல்லாமல் எங்கு போயினார்
4, என்னருமை தோழரன்றோ தெய்வ தூதர் சங்கமெல்லாம் இப்போதவர் என் பிதா முன் நிற்கிறார் - பின்னால் என்னையும் தன் ஊழியத்தின் தேற்றுவார்
5, வியாகுலம் என் வீட்டை விட்டுக் காட்டிலோடப் பண்ணிடனும் அங்கேயொரு துாதன் என்னை சந்தித்து - சூடாம் அப்பமும் ஜலமும் தந்து தேற்றுவேன்
6. வரும் நாளுக்காக வீணாய் என் மனம் நொந்தென்ன புண்யம் என்னை தினம் போஷிப்பவர் இல்லையோ - இன்னும் ஏழை யின் அவரை மட்டும் நம்புவேன்
7. கவனிப்பாய் காகத்தை நீ விதைப்புண்டோ அறுப்புண்டோ விலையின்றிப் போற்றவில்லையோ நாதன் - லீலிப் புஷ்பங்களில் வன்மையைத்தான் வைத்தார்
8. பத்மு தீவில் ஏகனாய் நான் தங்கிடும் பயப்படேன் வானந் திறந்தேசு நாதர் ஜோதியாய் - என்னைப் பரதீசில் ஆவிக்குள் எடுப்பாரே
9. ஹா மகேசா கருணேசா பொண்ணு நாதா நீரெனக்காய் வேண்டியதெல்லாம் தயவாய் தந்ததால் - நான் என் வாழ்நாளெல்லாம் உம்மைப் போற்றி பாடுவேன்