எந்தன் இயேசு நாதனே
endhan yesu naadhanae
1. எந்தன் இயேசு நாதனே உந்தன் ரூபமே இதுவோ அந்தக் கேடடைந்தார் - எந்தனுக்காக
இயேசுவின் இரத்தம் ஜெயம் தரும் வல்ல இரத்தம் மாற்றிடும் இரத்தம் மாசற்றோராய் நம்மையும் - தம்மைப் போல்
2. கொல்கொதா காண்கையில் லோக மோகம் குப்பைமேனி அன்பின் ஆழம் நீளமும் - ஆச்சரியமே - இயேசு
3. கண்கள் துஞ்சும் வேளையே கண்டீர் எம்மை அன்பினாலே உள்ளம் கரைந்தோடி ற்றே - வெள்ளமாய்த் தானே - இயேசு
4. எந்தன் திவ்ய சபையை சிந்தையில் கொண்டதாலே தந்தீர் உந்தன் ஜீவனை - உம் சாயலாக்க - இயேசு
5. கல்வாரியின் கஸ்திகள் காவினில் எம் கீதமே காண்கிலேன் வேறென்பதினை - இவ்வன்பிற்கீடாய் - இயேசு