எந்தன் வாஞ்சை பரலோகமே
endhan vaanjai paralogamae
எந்தன் வாஞ்சை பரலோகமே என்று சேர்ந்திடுவேன் என் நேசரை என் ராஜனை என்று நான் கண்டிடுவேன்
1. நேசர் தேசமதில் என்றும் பேரின்பமே கண்ணீரெல்லாம் மாறிடுமே என்றும் ஆனந்தமே --- எந்தன்
2. சாவின் கூர்மை யாவும் அழிந்து ஒழிந்ததே சஞ்சலமோ அங்கில்லையே நேசரை கண்டிடுவேன் --- எந்தன்
3. வீதி பொன் மயமே பாடியே மகிழுவேன் இராப்பகலோ அங்கில்லையே வெளிச்சம் இயேசு தானே --- எந்தன்
4. ஜீவ தண்ணீரினால் தாகம் தீர்த்திடுவார் உள்ளமெல்லாம் ஏங்கிடுதே என்று சேர்ந்திடுவேன் --- எந்தன்
5. தேவ அன்பதுவே நெருக்கி ஏவிடுதே பிரிக்கவோ ஏதுமில்லை அன்பரை சேர்ந்திடுவேன் --- எந்தன்
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm F G Am Gm A7 Dm Dm F C A# A7 Dm Dm Am G F A F C Gm A# G# Dm Dm Am G F A F C Gm A# G# Dm Dm Am G F A F C Gm A# G# Dm Dm Am G F A F C Gm A# G# Dm