எந்தன் உறவான அன்பு தேவா
endhan uravaana anbu devaa
எந்தன் உறவான அன்பு தேவா என்னில் உறவாட என்றும் நீ வா - 2 கனவான உலகில் நினைவாக நீர் வேண்டும் கலங்கிய உள்ளத்தினை கரை சேர்க்க நீர் வேண்டும்
இயேசுவே என் தேவனே உம்மை போற்றுவேன் எந்நாளுமே - 2
சோதனை வாழ்வில் வரும்போதெல்லாம் தாங்கும் பெலன் தந்து தயவு செய்தீர் கஷ்டங்கள் கண்ணீர்கள் எனை சூழ்ந்தாலும் காத்து என்னை நடத்திடுமே - 2 விசுவாசத்தில் என்னை நடத்திடுமே உம் பிள்ளையாய் நாம் மாறனுமே -2
எனக்காய் உலகில் வந்தவரே வெளிச்சமாய் என் வாழ்வில் உதித்தவரே என் பாவத்தை எல்லாம் சுமந்தவரே உம் அன்பிற்க்கு என்றும் அடிமை நானே - 2 நானே வழியும் சத்தியமுமாய் இருப்பேன் என்று உரைத்தவரே - 2