எந்தன் உள்ளம்
endhan ullam
எந்தன் உள்ளம் உந்தன் இயேசுவின் எண்ணில்லாத நன்மைகட்காய் துதிப்பாய்
நீதியின் வன்கரத்தாலே தாங்கியின் ஜீவித பாதையிலே நித்தம் கிருபையினால் முடிசூட்டினார் நிதம் அவர்க்கே துதியே - எந்தன்
என் கால்களை மான் கால்கள் போலாக்கி உன்னத ஸ்தலங்களில் ஜெயத்தின் என்னை நடத்துவதாலே நேயர்க்கென்றும் துதியே - எந்தன்
யாருண்டு என் நிகர் தம்மை யுவந்தே கொண்டதால் சொந்தமாய் யாவையும் செய்து முடித்தார் எமக்காய் சாற்றிடுவோம் துதியே - எந்தன்
துன்பத்தின் வாயிலினூடே நடத்தி பொன்னகர் சேர்ப்பவர் இன்முகம் காட்டி முன் நடத்துவதால் தந்திடுவேன் துதியே - எந்தன்
அன்பால் நிறைந்த சாலேமே! சீயோனே! உன் மணவாளன் இதோ வந்திடுவார் உன்னை சேர்க்கும் பொன்னாளை நினைந்தவரைத் துதிப்பாய் - எந்தன்