எந்தன் சேயே இனி ஏன்
endhan seyae ini en
எந்தன் சேயே இனி ஏன் பெண்ணாய்ப் போகிறாய்? எந்தன் சேயே! தாங்குவேன் நானே வா உன்னைத் தா எந்தன் சேய்! வீணாய் என் அலைவான் - வா தேடினேன் உன்னை தா - எந்தன்
1. உனக்காக இப்பாடுகட்குள்ளானேன் - உனக்காக வா எந்தன் மகனே வா இன்றைக்கே - உனக்காக மாறா தேன் மனமே? ஓ! ஆறாதென் அகமே - வா - எந்தன்
2. அடித்தார் என்னையும் மிதித்தார் - அடித்தார் ஆக்கினை அளித்தார் தாங்கினேன் - அடித்தாரே ஏனோ எனக்கிவை யேன்? அன்பினால் உனக்காயே - எந்தன்
3. பாவ இன்பம் உனக்குப் பெரிதா சோ - பாவ இன்பம் பாதகர் பலனோ பயன் தருமோ - பாவ இன்பம் பாராய் என் மரத்தைப் பார் தாறேன் என் இன்பத்தை - வா - எந்தன்
4. தேடி வந்தேன் உன் பேரில் பாசத்தாலே - தேடி வந்தேன் தேற்றுவேன் உனையே ஏற்றுக்கொள்வேன் - தேடி வந்தேன் திகையாதே மகனே வா பகையேனே நீயே வா - எந்தன்
5. விட்டுப் போறேன் இந்நிலையில் உன்னை யான் - விட்டுப் போறேன் வீசுவேன் கொடியைப் பாசமாய் தான் - விட்டுப் போறேன் வீட்டில் இழுப்பேன் வா நிச்சயம் சேர்ப்பேன் பார் - எந்தன்