எந்தன் ஊற்றுகளெல்லாம்
endhan ootrugalellaam
1. எந்தன் ஊற்றுகளெல்லாம் உன்னிலே இன்ப நகரமே உந்தனின் மேன்மை இதே உன்னத தேவன் வாஞ்சையும் நீயே சொந்தமாய் அதில் வசிப்பாரே
சீயோன் சிகரமதே சேர்வேன் எந்தன் நகரே நித்தம் வாஞ்சை இதே என் உரிமை இதே நித்ய பிதாவின் பூரணமே
2. உன்னில் உதித்தவர் உயர் நாமங்கள் இன்னும் வரைந்திடவும் மகிழ்ந்துரைத்திடவும் அன்பினில் பூரணராய் புகழ்ந்திடவே சீயோனே உன்னைத் தெரிந்தாரே - சீயோன்
3. உயர் அடைக்கலமாய் அரண்மனைகளில் தூய நாமம் எங்கும் விளங்கிடும் நின்னையே நித்திய காலமாய் நினைப்போம் கிருபையின் நிறைவாக - சீயோன்
4. முற்றும் முதற்பலனால் உனக்காகவே மீட்டுக் கொண்டேன் உன் சுவிசேஷத்தில் மற்றவர்க்கும் உரிமை எம்மில் இல்லையே மாசற்ற சீயோன் உனக்கே - சீயோன்
5. ஜெய கீதங்கள் உன்னில் நின்றிலங்குதே தூய ஜீவியம் தேவ சிங்காசனம் தேசியர் தேவனின் மாட்சியில் மறைந்தே மாண்புறு ஆட்சி செய்வோமே - சீயோன்