எந்தன் நேசரே உந்தன் மார்பினில்
endhan nesarae undhan maarbinil
எந்தன் நேசரே உந்தன் மார்பினில் இளைப்பாறுவேன் நித்தமும் சாருவேன் என்றும் நீரே எந்தன் தஞ்சம் துணையே எந்தன் கன்மலை நீர் - என்றும் எந்தன் கன்மலை நீர்
1. கன்மலை தண்ணீரும் நீரே எந்தன் தாகம் தீர்க்கும் நதியே ஒத்தாசையின் பர்வதமே (2) எந்தன் துணை இவரே - என்றும் நீரே என் பர்வதமே
2.கன்மலை தேனும் நீரே - எந்தன் பாதைக்கு தீபம் நீரே மதுரமே பொழியுதே (2) எந்தன் இனிமையே நீர் - என்றும் நீரே என் மதுரமே
3.கன்மலை எண்ணெயும் நீரே - எந்தன் ஜீவ ஊற்றும் நீரே ஆவியே பொழியுதே (2) எந்தன் ஆறுதல் நீர் - என்றும் நீரே என் அடைக்கலமே
4.கன்மலை சிகரம் நீரே - எந்தன் உயர்ந்த துதியும் நீரே உயர்த்துவேன் புகழுவேன் (2) உந்தன் நாமத்தையே - என்றும் நீரே என் அரணுமானீர்
5. பாரினில் உம்மையே தேடுவேன் - எந்தன் பயங்கள் யாவும் நீக்கினீர் உந்தனின் வருகையில் (2) சேர்ந்திட அருள் தாருமே - எந்தன் கன்மலை சிகரம் நீரே