எந்தன் நேசர் இயேசுவே
endhan nesar yesuvae
எந்தன் நேசர் இயேசுவே! உந்தன் ரூபம் காண்பேன் நான் இன்ப நேசர் உம்முடன் விண்ணில் வாசம் செய்வேன் நான்
1. மண்ணின் மேன்மை யெல்லாம் புல்லை போல் காயுதே கண்களின் காட்சி யாவும் மறைந்திடுதே உன்னத தேவனே நம்பிக்கை வைப்பேன் என் அரும் இயேசுவே நீரே எந்தன் வாஞ்சை
2. துரோகி யாம் எந்தன் குற்றங்களை மன்னித்து தூயனாய் உமதன்பு மாற்றுகிறார்! மாசற்ற சுதந்திரம் ஏழை நான் பெற்றிட மகிமையின் தேவனே பரிவுடன் இரங்கும்
3. என் கால்கள் சறுக்கும் டா உம் கிருபை தாங்குதே என் பாதை முழுவதுமாய் வெளிச்சமானீர் கண்ணுறங்காது கர்த்தா நீர் காக்கிறீர்! கருணையின் தேவன் சேர்ப்பீர் உம்மண்டையில்
4. என் பெலன் குறைந்து நான் தடுமாறும் உம் பெலன் எந்தன் உள்ளில் பெருகிடுதே பாடுகள் மூலம் மகிமையை அடைய கிருபையின் தேவனே கிருபையை நல்குவீர்
5. என் ஆவி, ஆத்துமாவும், சரீரமும் முற்றுமாய் தந்தேன் என் இயேசுவே ஏற்றுக்கொள்ளும்! உன்னத சீயோன் என்னும் சேர்த்திட என் ஆசை இயேசுவே! ஆமென் நீர் வாருமே