எந்தன் நேசர் மணவாளரே
endhan nesar manavaalarae
எந்தன் நேசர் மணவாளரே என்றென்றும் உடையவன் நான்
உந்தன் அன்பின் மழையில் நனைந்தேன் என்னை முழுவதும் உம்மிடம் இழந்தேன் உந்தன் நேசத்தழல் என்னுள் வீசும் புயல் உம்மண்டை அழைத்துச் செல்லுதே
கல்வாரி அன்பை ரசித்தேன் கயவன் என்னையே வெறுத்தேன் உந்தன் நேசரத்தம் சிந்தி செய்தீர் சுத்தம் உமக்கே முழுதும் சொந்தம் தான்
வாழும் நேசரே மகிழ்ந்திடுவேன் உந்தன் நேசத்தை புகழ்ந்திடுவேன் உந்தன் நேசம் தேடி நாடி ஓடி வந்து உம்மண்டை மயங்கியே கிடப்பேன்