எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க
endhan nenjukkulle nee pirakka
எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க எனக்கென்ன கவலை என் இறைவா இலர் அச்சமென்ப தெனக்கில்லை வழியெங்கும் தடையில்லை தலைவா உந்தன் பிறப்பு சிறப்பு தருமே ஆ இறையரசு நனவாகுமே ஆ
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே இறையரசு நனவாகுமே உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமேஉயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே பிறக்கவா
பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன் வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய் உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன் நான் உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய் உந்தன் உறவானது ஆ உயிர்த் துணையானது ஆ உந்தன் உறவானது உயிர்த் துணையானது உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே