எந்தன் நல்லவர் இயேசு
endhan nallavar yesu
எந்தன் நல்லவர் இயேசு வல்ல மெய்தேவன் என்னை தெரிந்து கொண்டார் நான் எதற்கினி அஞ்சிடுவேன் அவர் எந்தன் பரிகாரியே
காரிருள் சூழும் இத்தரையில் காத்திடுவார் தினமும் என் கிருபை போதும் என்றுரைத்தார் எந்தன் உள்ளம் கலங்கிடுமோ
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் நல்ல மேய்ப்பன் நான் என்றார் கல்லான பாதைகள் கடந்தேன் அவர்கரம் என்னை தாங்கினதால்
மகிமையைக் காணும் யாத்ரையிலே மரணத்தின் தாழ்வினிலும் ஆழ்கடல் ஆழங்களிலும் அவர் பெலமுள்ள கரம் என்னை நடத்தும்