எந்தன் மேய்ப்பர் நீரே
endhan meyppar neerae
எந்தன் மேய்ப்பர் நீரே என் துணையும் நீரே எந்தன் நேசர் நீரே வழுவாமல் காப்பவரே-2
ஏழை என்னை மறவாமல் உம் காருண்யத்தால் என்னை பெரியவனாக்கினீர்-2
1.ஒன்றுக்கும் உதவாதவனாய் இருந்தேன் ஒதுக்கப்பட்டோனாய் ஒடுங்கி கிடந்தேன்-2 உம் அன்பால் கண்டு உம் கரத்தால் தூக்கி குயவனை போல என்னை வனைந்தீர்-2
2.ஆதவரவற்றோனாய் அலைந்து திரிந்தேன் அன்பை தேடி ஏங்கி நின்றேன்-2 என் தாயை போல என்னை தேற்றி என் தகப்பனை போல என்னை சுமந்தீர்-2-எந்தன் மேய்ப்பர்