எந்தன் கண்மணியே உந்தன்
endhan kanmaniyae undhan
எந்தன் கண்மணியே உந்தன் கவலைகளை எந்தன் கரத்தில் வைத்துவிடு உன்னை கண்விழிப்பாய் - கரம் பிடித்து மார்போடு அணைத்திடுவேன்
அக்கினியில் நீநடக்கும் போது அக்கினிஜுவாலை உன் மேல் பற்றாமல் ஆறுகளை நீகடக்கும் போது உன்னோடு கூட நானிருப்பேன்
உனக்கெதிராய் பாளையமிறங்கி உன்மேல் ஓர் யுத்தம் வந்திட நேர்ந்தும் எந்தன் பெலத்தால் மதிலைத் தாண்டி சேனைக்குள் பாய்ந்து ஜெயம் பெறுவாய்
வெண்கல கதவும் இரும்பு தாழ்பாளும் முறிந்து போகும் எந்தன் வார்த்தையால் முடவர் நடக்க ஊமையர் பேச எந்தன் ஆவியை உன்னில் வைத்தேன்
மரண இருளின் பள்ளதாக்கிலே மாந்தரின் அன்பு பிரியும் போது மாறிடாகரத்தால் மகிழ்வுடன் அணைக்கும் மன்னவன் இருக்க கலங்கிடாதே