எந்தன் ஜீவனுள்ள
endhan jeevanulla
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் எந்தன் தேவனே துதித்திடுவேன் - என் அதிசயக் கிருபையை எண்ணியே மகிழ்ந்தே அன்பரைப் போற்றிடுவேன்
1. அம்புவி தோன்றுமுன் கண்டென்னையே தம் நித்ய கிருபையால் அழைத்திட்டாரே தூய்மையும் குறையில்லா அன்புள்ளோனாய் தூயரின் சந்நிதி நிறுத்திடுவார் - எந்தன்
2. கானகப் பாதையில் வழிநடத்தி வான மன்னாவினால் போஷித்தாரே ஞானக் கன்மலையாம் கிறிஸ்தேசுவே பானமாய் அகமதின் தாகந்தீர்த்தார் - எந்தன்
3. சோதனையாம் தீயில் நடந்த வேலை நாதனாம் இயேசுவே துணையானாரே வேதனையும் நோய் புரண்ட போது போதிய கிருபையை எனக்களித்தார் - எந்தன்
4. பரிசுத்த ஆவியால் நிறைத்தென்னையே பரமனின் ஆலயமாக்கினாரே அற்பமான எந்தன் சரீரத்தை அற்புதம் சாயலாய் மாற்றிடுவார் - எந்தன்
5. கிறிஸ்துவில் வளர்ந்தென்றும் கிருபையிலே மறுரூபமாகுவேன் மகிமையிலே பூரண வடிவுள்ள சீயோனிலே பூரணர் இயேசுவோடாட்சி செய்வேன் - எந்தன்