எந்தன் ஜெபவேளையில்
endhan jebavelaiyil
எந்தன் ஜெபவேளையில் நான் உம்மை தேடுவேன்
நீரே எனக்கு அடைக்கலமே - 2 எந்தன் ஜெபவேளையில் நான் உம்மை தேடுவேன் நீரே எனக்கு கேடகமே - 2
ஆராதனை (2) ஆயுள் முழுவதும் செலுத்திடுவேன்
1. பாவத்தைப்போக்கும் பரிகாரியே பரிசுத்தமாக்கும் பரிசுத்தரே - 2 உம்மை இன்று தேடிவந்தேன் எனக்கு எல்லாம் நீரே இயேசுவே - 2
2. தனிமைபோக்கும் தகப்பனே தவிக்கும் நேரத்தில் புகலிடமே - 2 இன்றும் என்றும் துணையும் ஆனீர் எனக்கு எல்லாம் நீரே இயேசுவே - 2
3. உடைந்து சிதைந்த பாத்திரம் நான் உமது கரங்களில் என்னை கொடுத்தேன் உமது சித்தம்போல் என்னை வனையும் எனக்கு எல்லாம் நீரே இயேசுவே - 2