எந்தன் இதயத்தின்
endhan idhayathin
எந்தன் இதயத்தின் தொனியாம் அன்பரென் இயேசுவே உந்தன் கனிமொழியே - மாறா (2) உவந்து போற்றிடுவேன் - நான் (2)
1. இன்ப நதியாய் இன்னல் அகற்ற வந்தார் என்னைத் தேற்றவே - அன்பே பூரண கிருபை யாயுள்ளில் பரவி பெருகுதே என்றும் எந்தன் ஜீவன் ஊற்றியுந்தன் சொந்தமாய் படைத்திட்டேனே - ஆ
2. நேயமுடனே நாயனுமக்காய் சாதனை புரிய - அன்பே ஆவியின் அபிஷேகத்தால் அவனிதனில் அழைத்தீரே என்னவோ! நான் நோக்கம் என்னில் இன்னமும் நினைந்திடுவேன் - ஆ
3. தேவசுதராய் தூய சபையாய் மேதினியில் திகழ - அன்பே அநாதியாய் நினைந்தோர் நீரே அன்பர் திரு சித்தம் போல் குத்தமில்லா உந்தன் அன்பு கேதும் யான் செய்யலாகுமோ - ஆ
4. நாட்கள் நொடியில் கடந்து செல்லாதே மீட்டர் நீர் வருவீர் - அன்பே திரையாம் தேகம் வழியேகி பரிசுத்தர் மறைகிறார் வேண்டும் நாதா வேலையாட்கள் வேண்டுதற் கிரங்கிடுவீர் - ஆ
5. சீயோன் மீதிலே ஆவல் கொண்ட நாள் ஜீவியமுடையோர் - அன்பே சிறந்திலங்கும் திருநாளை சிந்தித்தால் என்ன மா மகிமை ஆமென் இயேசுவே நீர் வாரும் ஆவலாய் ஏங்குதே சபை - ஆ