எந்தன் தேவா ஸ்தோத்திரம்
endhan devaa sthothiram
எந்தன் தேவா ஸ்தோத்திரம் இந்தக் காலையைக் காணச் செய்ததால்
1. கடந்த ராத்திரி காலந்தன்னில் என்னை கருத்தாய்க் காத்தீரே செம்மையாய் என்னைச்சூழ இருந்து சுகத்துடன் காத்தீரே
2. நித்திரை செய்து தூங்கிடும் வேளை துணைவராய் நீர் இருந்து தூங்காமல் காத்தீர் துங்கவனே நீர் துன்பங்கள் அணுகிடாமல்
3.தூங்காமலும் உறங்காமலும் என்னை பாதுகாத்தீர் தூயரே தீமை அணுகாமல் திருக்கரத்தால் என்னை அரவணைத்தீர் தூயரே
4. ஐந்து காய அடைக்கலத்தில் வைத்து அன்புடன் காத்தீரே ஆறுதலுடனே நித்திரை செய்து விழித்திடச் செய்தீரே
5. அக்கினி மதிலும் கோட்டையுமாயிருந் தடியானைக் காத்தீரே ஆபத்து அணுகாமல் ஆசீர்வாதத்துடன் இந்நாளை ஈந்தீரே
6. சமாதானத்துடனே காலையைக் கண்டு களிகூரச் செய்தீரே நானிலத்தில் யான் நன்றியுடனே அல்லேலூயா பாடவே
7. பகல் முழுவதிலும் பத்திரமாக பாதுகாத்திடும் தேவா பரிசுத்த ஜீவியம் செய்து முன்னேற பலப்படுத்திடும் தேவா
8. ஸ்தோத்திரித்து உம்மை மகிமைப்படுத்த தூயரே அருள் புரிவீர் உண்மையுடனே உம்மைப் பின்செல்ல தேவா நீர் அருள் புரிவீர்