எந்தன் ஆத்தும நேசர்
endhan aathuma nesar
1. எந்தன் ஆத்தும நேசர் இயேசுவே உந்தன் மாறா நேசம் நினைக்கையில் என் உள்ளம் நன்றியால் பொங்குதே என்றுமே என் ஆவி நித்தம் உம்மில் நெகிழ்ந்திடுதே
என் சகாயம் கேடகம் நீரே மகிமை பொருந்திய பட்டயம் நீரே வாக்கு மாறா வல்லவா இரட்சகர் நீரல்லோ வழுதிடாது என்னைக் காப்பீரே
2. கோரமான சாபக் குழியிலும் உளையான பாவச் சேற்றினின்றும் மீட்டெடுத்தென்னையும் கன்மலை மேல் நிறுத்தியே நவகானமும் எந்தன் நாவிலீந்தீரே
3. விக்கினங்கள் சூழ்ந்திடும் வேளையில் காத்தீரே உந்தன் செட்டையின் நிழலில் தீங்கு நாளில் எந்தன் கூப்பிடுதல் கேட்டுமே கூடாரத்தின் மறைவில் பாதுகாத்தீரே
4. வருங்காலங்களில் விளங்கிட உம் மகா மேன்மையும் கிருபையின் தானம் உம் தூய ஆவியால் என்னையும் உயர்த்தினார் உன்னதம் வரை உம்மோடிருத்திடவே
5. சீரிலங்கும் சீயோனின் வேலையும் சீக்கிரமாய் தீர்த்துமே வருவீர் சீர்பொருந்து உந்தன் சாயலாக மாறிட சீயோனின் ராஜனே உம் கிருபை தாருமே