எந்தன் ஆத்ம நேசர் எங்கே
endhan aathma nesar engae
எந்தன் ஆத்ம நேசர் எங்கே அவர் எங்கே அவர் எங்கே அவர் எங்கே எங்கே எங்கே எங்கே
நகரத்தின் தெரு வீதி சென்று நான் நலமுடன் தேடினேன் நின்று ஐயோ தேடியும் காணாமல் நின்று முகம் வாடி மயங்குகிறேன் நின்று
காட்டு மரங்களில் தானும் நல்ல கிச்சிலி மரம் போல தோணும் நல்ல குமாரர்க்குள்ளே இவர்தானும் குடியிருப்பது போலவே தோணும்
பதினாயிரம் பேரில் சிறந்தோர் அதி வெண்மை சிவப்பு நிறமானோர் தலை பொன்மயமாய் விளங்கிடுமே மயிர் சுருள் சுருளாய் இருப்பவரே
லீபனோன் போலவர் ரூபம் மிக மதுரமவர் வாயின் வசனம் லீலிப் புஷ்பங்கள் போன்றவருதட்டில் நின்றுவாசனைவெள்ளைப்போளம் வடியும்
இடது கை என் தலைகீழ் வைத்து அவர் வலது கையால் அரவணைத்து என்னைமனதாய் அணைத்து கொள்வதாலே நான் சோகமடையேன் நேசத்தாலே