எந்தன் ஆத்ம நேசர்
endhan aathma nesar
எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே பாவம் யாவும் விட்டு நிற்கின்றேன் இன்பமானாலும் துன்பமானாலும் உந்தன் சிலுவை சுமந்து செல்வேனே
எனக்காய் பாடுகள் பட்டீரே எனக்காய் உம் உயிர் தந்தீரே இந்த ஏழை பாவி நான் இதற்கு ஈடாக என்ன செய்வேன் இயேசுவே
சாவின் அந்தகாரம் வந்தாலும் இயேசுவே உம் புகழ் பாடுவேன் நீரே உண்மை தெய்வம் என்னும் உண்மையை என் நாவால் என்றும் போற்றி பாடுவேன்
என் சாவின் பின்பும் உம்மையே என் கண்ணால் காண உதவும் என் ஜீவன் போகும் நாள் என்று வருமோ அன்று உம்மை நான் காண்பேன்