எந்தையே கெஞ்சுகின்றோம்
endhaiyae kenjugindrom
1. எந்தையே! கெஞ்சுகின்றோம் இந்தச் சிறு பிள்ளைக்காய் உந்தனருளால் இதை எந்த நாளும் காருமே.
2. இந்தப் பிள்ளை என்றுமே உந்தன் சித்தம் செய்துமே சந்ததம் நற் சீலமே சாலப் பெறச் செய்யுமே.
3. நாங்களும் எம் நாதனே! பாங்கா யுமைப் பின் செல்ல நீங்கா தெம்மோடிருந்து நித்தம் காரும் தேவனே!