எந்த நேரமும் எப்போதும்
endha neramum eppodhum
எந்த நேரமும் எப்போதுமே இயேசு எனக்கு ஒத்தாசை
இயேசு ராஜனை ஸ்தோத்தரிப்பேன் இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்
இக்கட்டில் மனிதர் உதவி இல்லாமலே அற்றுப் போனாலும் எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே இயேசு நாமத்தில் கிடைத்திடுமே
சொல்லொண்ணா பாடுகள் சகிக்க சென்ற காலம் பெலன் தந்தாரே - எந்தன் வாழ்நாளெல்லாம் தேவசித்தமெல்லாம் என்னில் முற்றிலும் நிறைவேறுமே - எந்த
சிறுமைப் பட்டோரின் நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப் போகாதே தம்மைத் தேடுவோரை கர்த்தர் கைவிடாரே தேவன் நமக்கு அடைக்கலமே-எந்த
ஒவ்வொரு ஆண்டும் முழுவதும் எவ்வளவோ அற்புதம் செய்தார் வருங்காலத்திலும் வருகை வரையும் வாக்குத்தத்தம் தந்து நடத்துவார் -எந்த
குமாரன் கோபம் கொள்ளாமலும் வழியில் நாம் அழியாமலும் அவர் பாதங்களை முத்தம் செய்திடுவோம் அன்பர் இயேசுவை அண்டிக் கொள்வோம். -எந்த
உம் சித்தம் செய்ய உம்மைப் போல் மாற வல்லமை தந்திடுமே இம்மட்டும் காத்த இம்மானுவேலே இனியும் நடத்திடுமே
More from Pazhaya Paadalgal
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமேaanandhamaay naamae aarppiribomaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தம் பேரானந்தம்aanandham peraanandhamSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆயிரம் வருட அரசாட்சியேaayiram varuda arasaatsiyaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal