எனக்கு பாராட்டின கிருபை
enakku paaraattina kirubai
எனக்கு பாராட்டின கிருபை பெரியது கிருபையே-4 உங்க கிருபை சிறந்தது கர்த்தரின் கிருபை சிறந்தது
1.சிறுமையான என்னை கண்டீரே எளிமையான என்னை காத்தீரே உமக்கு நிகரேயில்லை தேவனே உமக்கு இணையேயில்லை தேவனே நீர் ஒருவரே தேவன் கிருபையே-4 உங்க கிருபை மிகுந்தது கர்த்தரின் கிருபை மிகுந்தது
2.வெட்கத்தில் அனுகூலம் மானீரே துணையாக நின்று தேற்றினீரே நீரே மகத்துவம் என்றும் உள்ளவர் நீரே அதிசயம் தினமும் செய்பவர் நீர் ஒருவரே தேவன் கிருபையே-4 உங்க கிருபை தேற்றுமே கர்த்தரின் கிருபை தேற்றுமே
3.ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டீரே துயரத்தில் மகிழ்ச்சி ஆனிரே நீர் மட்டும் நல்லவர் நீர் நன்மை செய்பவர் நீர் ஒருவரே தேவன் கிருபையே-4 உங்க கிருபை நடத்துமே கர்த்தரின் கிருபை நடத்துமே.