எனக்காய் யுத்தம் செய்பவர்
enakkaay yutham seybavar
எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு எனக்காய் சாவை வென்றவர் எந்தன் இயேசு - 2
வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில் விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில் - 2
ஒரு வழியாய் வரும் எதிரியை கண்டு அஞ்சிட மாட்டேனே - 2 ஏழு வழியாக துரத்திடும் தேவன் என் முன்னே செல்கின்றார் - 2 (வல்லமை)
எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும் என் தேவன் பெரியவரே - 2 அக்கினி குதிரைகள் இரதங்களோடு சூழ்ந்து கொண்டிடுவார் - 2 (வல்லமை)
என் சத்துரு முன்பாக விருந்தொன்றை ஆயத்தம் செய்கின்றார் - 2 என் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றார் - 2 (வல்லமை)