எனக்காக யாவற்றையும் செய்பவரே
enakkaaga yaavatraiyum seybavarae
எனக்காக யாவற்றையும் செய்பவரே எனக்கினி பயமில்லை உலகினிலே
எனக்காக யாவற்றையும் செய்வதினால் - நான் இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி தொழுதிடுவேன்
1. ஆகாயத்துப் பறவையை கவனித்துப்பார் அவை விதைப்பதில்லை அவைகள் அறுப்பதில்லை அவைகளைப் பிழைப் பூட்டும் பரம பிதா - அவர் நம்மையும் நடத்துவது உண்மையல்லவா
2.நாளைய தினத்திற்காகக் கவலை வேண்டாம் நாதன் இயேசு இருக்கிறார் அஞ்ச வேண்டாம் நாளைய தினத்திற்காகக் கவலைப்படும் - அந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்
3. பஞ்சத்திலே எலியாவுக்கு அப்பம் கொடுத்தார் பஞ்சமின்றி எலியாவை ஆசீர்வதித்தார் பஞ்சம் நீங்கி வரும் வரை அந்த வீட்டில் - என்றும் பானையிலே எண்ணை மாவும் குறையவில்லை