எனக்காக யாவையுமே
enakkaaga yaavaiyumae
எனக்காக யாவையுமே செய்து முடித்தார் என் தெய்வம் பெரியவரே உனக்காக யாவையுமே செய்து முடித்தார் உன் இயேசு நல்லவரே -2
எனக்குள் இருப்பவர் பெரியவர் பெரியவரே உனக்குள் இருப்பவர் வல்லவர் வல்லவரே -2
மாராவை மதுரமாக மாற்றிவிட்டார் மன்னாவை அனுதினம் அனுப்பிவிடுவார்-2 செங்கடலை எனக்காக பிளந்திடுவார் யோர்தானை கடந்து செல்ல உதவி செய்வார் -2
என் துக்கம் சந்தோஷமாய் மாற்றிவிட்டார் எனக்காக எல்லாமே செய்து முடித்தார் -2 பரிசுத்த ஆவியினால் நிரப்பி விட்டார் பரலோக பாஷைகளை கொடுத்துவிட்டார் -2
எரிகோவை எனக்காக இடித்து விட்டார் எகிப்தை காணாமல் மறையச் செய்தார் -2 கண்ணீரை இப்போதே துடைத்து விடுவார் கவலையை இன்றைக்கே விரட்டிடுவார் -2