எனைத் தாங்கும் என் செல்வமே
enaith thaangum en selvamae
எனைத் தாங்கும் என் செல்வமே உடன் வாழ எனில் வாருமே நீங்காத உருவாகவே நிழலாக உடன் வாருமே வந்தேன் உன் திருப்பாதம் அமர்ந்திட வந்தேன் எனை உமதருள் நிறைந்திட வருவாய் என் இதயத்தில் உனக்கிடுவாய் திடமாய் நான் வாழ்ந்திட துணை புரிவாய்
தீராத துன்பங்கள் எனை வாட்டும்போது தாயாக எனைத்தாங்க நீ வேண்டுமே தீர்வில்லா குழப்பங்கள் எனைச் சூழும் போது தந்தையாய் எனைக் காக்க நீ வேண்டுமே பிறர் என்னை தவறாக புரிந்திடும் போது - 2 தோழனாய் தோள் தாங்க நீ வேண்டுமே
நியாயங்கள் நிலைமாறி தடுமாறும்போது நீதியை நிலைநாட்டம் மனம் வேண்டுமே உரிமைகள் உருமாறி விலைபோகும் போது கனம் நின்று போராடும் மனம் வேண்டுமே பகை பழி காயங்கள் சூழ்ந்திடும் போது - 2 உண்மையாய் உன்னிலே நான் வாழ்வேன