எனை நினைத்து உருகியது
enai ninaithu urugiyadhu
எனை நினைத்து உருகியது போதும் இயேசுவே எனக்காக நீர் சிந்திய இரத்தம் போதுமே கல்வாரி மலையின் மீது பட்ட துன்பங்கள் இயேசுவே எனக்காக மரித்து உயிர்த்தீரே உமக்கென்று நான் வாழ்ந்திட உம்மையே நான் சேவிப்பேன்
என்னுயிர் உள்ள நாள் முழுதும் உமக்காக நான் வாழ்ந்திடுவேன் மரணம் உம்மை சூழும் போதிலும் மறவாமல் என்னை நினைத்துக் கொண்டீரே
உமக்கென்று நான் வாழ்ந்திடவே உம்மையே நான் சேவிப்பேன் என்னையும் உந்தன் மார்போடு அணைத்து கொண்ட என் இயேசுவே-2