எனது உள்ளம் யாருக்கு
enadhu ullam yaarukku
எனது உள்ளம் யாருக்கு தெரியும் – இயேசையா எனது நினைவு யாருக்கு புரியும்
என்னை நீர் அறிவீரே உம்மை நான் அறிவேனே என்னை புரிந்து கொண்ட தெய்வம் நீரே – இயேசையா
1. அன்னை தந்தை அறியவில்லையே – என் உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே என்னை அறிந்த தெய்வம் நீரையா – என் உள்ளம் புரிந்த அன்னை நீரையா — எனது
2. மனிதனோ முகத்தை பார்க்கிறான் நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர் நொருங்கி போன எனது உள்ளத்தை அரவணைத்து காயம் ஆற்றினீர் — எனது
3. ஊரும் உறவும் என்னை வெறுத்தது என் உள்ளம் நொந்து சோகமானது என் உள்ளம் அறிந்து ஓடி வந்தீரே ஆற்றி தேற்றி அணைத்துக் கொண்டீரே — எனது