என் இயேசுவின் சந்நிதியில்
en yesuvin sannidhiyil
என் இயேசுவின்சந்நிதியில் என்றும் கீதங்கள் பாடிடுவேன் என்னைக் காத்திடுமே அவர் நாமமதே துதி கீதங்கள் பாடிடுவேன்
1. கண்ணீர் அவர் துடைத்திடுவார் கருணைக்கரம் தாங்கிடுவார் எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே
2. பரமன் குரல் கேட்கும் போது பரமானந்தம் அடைந்திடுவேன் எந்தன் அவசியங்கள் அவர் கிருபையாலே அதி சீக்கிரம் கிடைத்திடுமே
3.மோட்ச பாக்கியத்தை நினைத்திடவே பொங்குதேயுள்ளம் சந்தோஷத்தால் வேகம் வந்திடுவார் எந்தன் ஆத்மநேசர் என்னைத் தம்முடன் சேர்த்திடவே
4.பாரில் பரிசுத்த ஜீவியத்தை தேவ பயத்துடன் காத்துக் கொள்வேன் எந்தன் ஆவியும் ஆத்ம சரீரமுற்றும் என்றும் கர்த்தருக்கொப்புவிப்பேன்
5.தேவ சேனைகள் ஆர்ப்பரிக்க கர்த்தர் இயேசு தம் மகிமையுடன் வானில் வெளிப்படுவார் சீயோன் ராஜனவர் என்னை சீயோனில் சேர்த்திடுவார்