என் யேசுவை மாத்திரம் பார்த்துக்கொண்டு
en yesuvai maathiram paarthukkondu
என் யேசுவை மாத்திரம் பார்த்துக்கொண்டு பொன் யேசுவின் அழகையே சிந்தை செய்து -2 என் இயேசுவுக் கெந்தனை தத்தம் செய்து -2 இயேசுவைப் போலாக - நான் வாஞ்சிக்கிறேன்
உலகமும் அதிலுள்ள இச்சைகளும் உலகுடன் அலைபோல அழிந்துபோகும் -2 நலமுடன் அவர் சித்தம் செய்து கொண்டு -2 உலகினில் ஜீவிக்க - வாஞ்சிக்கிறேன்
என் ஜீவனென் ஏசுவில் படைத்துவிட்டு ஜீவனப் பெருமையும் தள்ளிவிட்டு -2 ஜீவனாம் இயேசுவை எடுத்துக்கொண்டு -2 ஜெய ஜீவியம் செய்ய வாஞ்சிக்கிறேன்
கண்ணினது இச்சையைத் தள்ளிவிட்டு கண்களாலென் இயேசுவைப் பார்த்துக்கொண்டு -2 கண்மணியாம் அவரது இருதயத்தை -2 கவர்ந்துமே வாழ்ந்திட வாஞ்சிக்கிறேன்
மாமிசத்தின் இச்சையை வெறுத்துவிட்டு மாமிச சரீரத்தை அறைந்துவிட்டு -2 மறுரூப சாயலைப் பெற்றுக்கொண்டு -2 மறுரூபமாகவே வாஞ்சிக்கிறேன்
இவ்வுலகில் வேறாசை எனக்கில்லையே இவ்வுலகில் என்னாசை பொன் இயேசுவே -2 இவ்வுலகில் காண்பவை மாயை தானே -2 உலகினில் இயேசுவே - என் பொக்கிஷம்
என் நேசரே எந்தனைக் காத்துக்கொள்ளும் என்னுள்ளினில் எப்போதும் வாசஞ் செய்யும் -2 பொன்முகத்தை ஏழையான் பார்க்குமட்டும் -2 பரிசுத்தமாயென்னை - வைத்துக்கொள்ளும்