என் யேசுவே உம்மையே
en yesuvae ummaiyae
என் யேசுவே உம்மையே நான் நேசிக்கிறேன் வேறெந்த வீண்வாழ்வையும் நாடாதிருப்பேன் உம்மாலே மா நன்மையை நான் கண்டடைந்தேன் என் நாதா! மென்மேலும் - உம்மை நேசிக்கிறேன்.
இப்பாவியின் பேரில் முத்தி நேசம் வைத்தீர் நீர் ப்ராணத்தியாகம் செய்து மீட்டுக்கொண்டிர் முட்கிரீடமும் ஐங்காயமும் தியானிக்கிறேன் என் நாதா! மென்மேலும் உம்மை நேசிக்கிறேன்.
பேரன்பின் சொரூபி! உம்மைப் போற்றுகிறேன். எப்போதும் உம்மண்டை தங்க வாஞ்சிக்கிறேன் என் ஜீவன் போனாலுங்கூட நீங்க மாட்டேன் என் நாதா! மென்மேலும் - உம்மை நேசிக்கிறேன்.
பேரின்பமே லோகத்தில் ஆனந்தம் கொள்வேன் நீடூழி உம்முகம் கண்டு ஸ்தோத்திரிப்பேன் எப்பாவமில்லாமலும் நான் துதித்தல் செய்வேன் என் நாதா! மென்மேலும் - உம்மை நேசிக்கிறேன்