என் இயேசுவே உம்மை அல்லால்
en yesuvae ummai allaal
என் இயேசுவே உம்மை அல்லால் மண்ணில் ஆறுதல் ஒன்றுமே கண்டிலேன்
சுக செல்வ மகிமை பெருமையிலெங்கும் இன்பம் தரும் பொருள் காணேன் தாகம் பெருகும் தண்ணீரேயன்றி லோகம் வேறொன்றும் நல்காதே
ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையும் நீர் பெலனுமே நாதா ஆகையால் பூமி நிலை மாறினாலும் அஞ்சேன் கடல் பொங்கினாலும்
பாழ்மணல் பாதையில் எரியும் வெயிலில் பரனே உம் கிருபையின் நிழலில் பாடி மகிழ்வேன் குருசை புகழ்வேன் பேரின்ப நாட்டில் நான் வாழ்வேன்
என் நேசர் இயேசுவில் நித்தமும் சார்ந்து பரதேச யாத்திரை செய்வேன் பாரினில் பொங்கும் துயரங்கள் தங்கும் பாரங்கள் ஏதும் நானறியேன்
உமதன்பின் இனிமையை என்றும் ருசிப்பேன் உலகின் வினைகள் மறப்பேன் உருகும் என் நெஞ்சம் அருளும் நல் தஞ்சம் பெருகும் என் இதயத்தின் இன்பம்